// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி அருகே 60 ஏக்கரில் GVS Unlimited-ன் Phase-6 பண்ணை நிலம் அறிமுகம்; முன்பதிவு செய்தவர்களுக்கு தங்கம், பங்கேற்ற அனைவருக்கும் வெள்ளி நாணயம்!

திருச்சி அருகே 60 ஏக்கரில் GVS Unlimited-ன் Phase-6 பண்ணை நிலம் அறிமுகம்; முன்பதிவு செய்தவர்களுக்கு தங்கம், பங்கேற்ற அனைவருக்கும் வெள்ளி நாணயம்!

திருச்சி ஆர்ச்சம்பட்டி அருகே சின்னப்பனையூர் கிராமத்தில் GVS Unlimited Private Limited நிறுவனத்தின் புதிய Phase-6 பண்ணை நிலம் அறிமுக விழா கோலாகலமாக நடைபெற்றது.

சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணை நிலத்தின் Phase-6 அறிமுக விழாவில் பிரபல நடிகை அறந்தாங்கி நிஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு Phase-6 திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.


நிகழ்ச்சியில் GVS நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Phase-6 பண்ணை நிலத்தை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு பரிசுத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.


25 சென்ட் பண்ணை நிலம் முன்பதிவு செய்தவர்களுக்கு 2 கிராம் தங்கம்,50 சென்ட் முன்பதிவு செய்தவர்களுக்கு 4 கிராம் தங்கம்,1 ஏக்கர் முன்பதிவு செய்தவர்களுக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.


மேலும், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசாக வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன.இயற்கை சூழலுடன் கூடிய பண்ணை நிலத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு புதிய வாய்ப்பாக GVS Unlimited Phase-6 அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அறிமுக விழாவிலேயே பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments