BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** மாணவிகள் தனி திறமை வளர்த்து கொள்வது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி

மாணவிகள் தனி திறமை வளர்த்து கொள்வது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி

 திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர் பகுதியில் உள்ள அய்மான் மகளிர் கலை  அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு தங்களது தனி திறமைகளை எப்படி வளர்த்து கொள்வது தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி புதுமையான விஷயங்களை  எப்படி செய்வது தங்களது தனி திறமைகளை  எப்படி வெளிப் படுத்துவது என்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது...


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் படிக்கும்போது எப்படி தெளிவாக தங்களது எதிர்கால துறையை தேர்வு செய்வது என்றும் அப்படி தேர்வு செய்து பணிக்கு செல்லும் போது  எப்படி சிறப்பாக பணியாற்றுவது என்பது குறித்தும் சமூக வலைதளம் ஊடகம் தகவல் தொழில்நுட்பங்களில்  வாயிலாக நமது திறமைகளை எப்படி வெளி படுத்துவது அதில் எப்படி  புதுமையான நிகழ்ச்சிகளை செய்வது அதன் மூலமாக என்ன வருமான வாய்ப்புகள் உள்ளது...




சமூக நலன் சார்ந்து எப்படி நமது படைப்புகளை உருவாக்குவது  உழைப்பு தன்னம்பிக்கை திறமை ஆகியவற்றை பயன்படுத்தி எப்படி சாதிப்பது என்பது குறித்து  உரையாற்றினார் இதனை தொடர்ந்து மாணவி களுடன் கேள்வி பதில் கலந்துரையாடல் நடைபெற்று மாணவிகள் தங்களது திறமைகள் மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்த்துக்களை பகிர்ந்து கொண்டு பல்வேறு சந்தேகங்களை  கேள்விகள் வாயிலாக கேட்டனர்..









தற்கு அவர்களுக்கு பல்வேறு சாதனையாளர் களின் வாழ்வில் சாதிப்பதற்க்கு முன்பு நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் அனுபவங்கள் குறித்து பகிரப்பட்டது இந்நிகழ்வில் பல்வேறு விருதுகளை பெற்ற விழிப்புணர்வு படங்கள் திரையிடப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகள் பலர் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து தங்களது தனி திறமைகள் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர் இந்நிகழ்வில்  கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். ஹசைனா பேராசிரியர் முனைவர் கல்பனா மற்றும் பேராசிரியர் கள்  அமைப்பின் விளையாட்டு பிரிவு இணை செயலாளரும் குத்துச்சண்டை  பயிற்ச்சியாளருமான எழில் மணி மற்றும் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments