// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தையல் கலைஞர்கள் முன்னேற்ற கொடி அறிமுக விழா

தையல் கலைஞர்கள் முன்னேற்ற கொடி அறிமுக விழா

 திருச்சி மாவட்டம் இலால்குடி சட்டமன்ற தொகுதியில் இன்று மணக்கால் தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் தையல் கலைஞர்கள் முன்னேற்ற கொடி அறிமுக விழா  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது. 


விழாவிற்கு கழக நிறுவனத்தலைவர் பொழில்.துரைராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் மாநில துணை செயலாளர் பார்த்திபன் திருச்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து மாவட்ட தலைவர் ராஜீகுமார் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் முத்துராஜ் திலக் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தஞ்சை ஹரி பிரசாத் உள்பட பல மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்ச்சி முடிவில் இலால்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கூகூர் மைக்கேல் நன்றியுரை வழங்கினார்.

Post a Comment

0 Comments