BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரியில் மீலாதுன் நபி மாநாடு

திருச்சி ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரியில் மீலாதுன் நபி மாநாடு

 திருச்சி ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரியில் மீலாதுன் நபி மாநாடு மற்றும் மாநிலம் தழுவிய கிராஅத் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா


திருச்சி ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரி மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மற்றும் இ.எம்.எஸ். மீடியா ஆகியோர் இணைந்து நடத்திய மீலாடி நபி மாநாடு திருச்சி இனாம் குளத்தூர் அருகே உள்ள 

ஜாமிஆ யாஸீன் அரபிக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி தலைமை வகித்தார். அஹ்லுல்பைத்தினர் மற்றும் கலீபாக்கள் முன்னிலை வகித்தனர். ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை தேசியத் தலைவர் ஹுஸைன் முஹம்மது விழா அறிமுக உரையாற்றினார்.


மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட மாநிலம் தழுவிய அல்ஹஸனைன் கிராஅத் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் பரிசளித்து வாழ்த்துறையாற்றினார்


தொடர்ந்து சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் ஹபீபுல்லாஹ் ஜமாலி, முகப்பேர் கிழக்கு ஜமாஅத் தலைமை இமாம் சேக் முஹ்யுத்தீன், ஜாமிஆ யாஸீன் அரபிக் கல்லூரி முதல்வர் ஸயீது முஹம்மது ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

தஞ்சாவூர் மாவட்ட அரசு டவுன் ஹாஜி.சையத் காதர் ஹுஸைன், தமிழ்நாடு அரசு உலமாக்கள் நலவாரிய உறுப்பினர் சிஹாபுத்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் குளோபல் தலைவர் முனைவர். சஹாப்தீன் தொகுத்து வழங்கினார்



விழாவில், மாநிலம் முழுவதிலும் இருந்து ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள், தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தர்கா அறங்காவலர்கள், பங்காளிகள், சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஜம்இய்யத்துல் உலமா சபையினர், யாஸீனிய் மவுலவிகள் பேரவையினர் உள்பட ஏராளமானோர் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக, அனைவருக்கும் கந்தூரி அன்னதான உணவு வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரி சார்பில் மாநாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments