BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தேசிய அளவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாற்றம் அமைப்பு சார்பில் பாராட்டு விழா

தேசிய அளவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாற்றம் அமைப்பு சார்பில் பாராட்டு விழா

திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தடகள மற்றும் குத்துச்சண்டை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது..


திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் V.முனியாண்டி அவர்கள் மூலம் பயிற்சி பெற்ற கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி S.கிருத்திகா தேசிய அளவில் தேர்வாகி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பங்கு பெற்று 400 மீ பிரிவில் முதலிடம் மற்றும் 600 மீட்டர் பிரிவில் இரண்டாமிடம்  பிடித்தார் மேலும் திருச்சி மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற தடகள திறனாய்வு ஓட்டப்பந்தய போட்டிகளிலும்  முதலிடம் பிடித்தார்...



இதனை தொடர்ந்து சென்னை மாவட்டம் மேலக்கோட்டையூரில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் மாணவர்கள் V.கவின் 100 மீட்டர்  S.கெளசிக்  (நீளம் தாண்டுதல்)   S.மாலிக் (மும்முறை தாண்டுதல்) பிரிவிலும் மற்றும் S. கிருபாலஷ்மி,( நீளம் தாண்டுதல்) D.தமிழ்இனியா (600 மீ) பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர் திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள திறனாய்வு போட்டிகளில்  மாணவன் V.கவின் கலந்து கொண்டு  100 மீ (விரைவோட்டம்)  முதலிடம் மற்றும் (நீளம் தாண்டுதல்) போட்டிகளில் முதலிடம் பிடித்தார்..





S.கெளசிக் (நீளம் தாண்டுதல்) போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்  டேக்வாண்டோ தேசிய விளையாட்டு வீரரும் பயற்ச்சியாளருமான மேத்யூ அவர்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தேசிய குத்துச்சண்டை விளையாட்டு வீரரும்  பயற்ச்சியாளருமான எழில் மணி அவர்களிடம் பயிற்சி பெற்ற குத்துச்சண்டை விளையாட்டு வீரர்கள் கடந்த  5ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தென்மண்டல அளவிளான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் ரஞ்சித் 98 கிலே பிரிவில் வெள்ளி வீர அமர்நாத் 64கிலே பிரிவில் தங்கம் முகமது அபித் 52கிலோ பிரிவில் தங்கம் பிரிவில் இம்மான் பிரையன் 44கிலோ பிரிவில் தங்கம்  கபிலன் 32கிலோ பிரிவில்  வெள்ளி பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர் இவர்களை திருவெறும்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அறிவழகன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்..









இதனை தொடர்ந்து திருச்சி கல்லுகுழியில் உள்ள விளையாட்டு மைதானத்தில்   போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் நினைவு பரிசும் பாராட்டு சான்றும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் தாய் வீடு உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகி சிவகுமார் ஒயிட் ரோஸ் பொது நல சங்கத்தின் தலைவர் சங்கர் சமூக ஆர்வலர் ரூபி ஆர்ம்ஸ்ட்ராங் சட்ட ஆலோசகர்கள் வழக்கறிஞர் ஆறுமுகம் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மகளிர் பிரிவு இணைச் செயலர் அல்லி கொடி விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள பயற்ச்சியாளருமான சுரேஷ் பாபு மற்றும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர். ஏ. தாமஸ் தடகள விளையாட்டு பயிற்ச்சியளர் முனியாண்டி குத்துச்சண்டை விளையாட்டு பயிற்ச்சியளர் எழில் மணி மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments