// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி தேசிய கல்லூரி மென் பொருள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசிய கல்லூரி மென் பொருள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசிய கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் B.Voc (ICT) துறையும்,திருச்சி T4TEQ Software Solutions இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

இந்த விழாவினை தேசியக் கல்லூரியின்  முதல்வர் டாக்டர்.K. குமார் தலைமை ஏற்க, துணை முதல்வர் டாக்டர் D. பிரசன்ன பாலாஜி முன்னிலையில்,B.Voc(ICT) துறைத் தலைவர் N. பார்த்தசாரதி ஒருங்கிணைப்பில், மாணவி M.சுவாதி வரவேற்புரை வழங்க விழா இனிதே ஆரம்பமானது. நிகழ்ச்சியில் T4TEQ Software Solutions நிர்வாக அதிகாரி இஸ்மாயில் மற்றும் புவனேஸ்வரி கலந்து கொண்டு கல்லூரியின் பெருமையையும், B.Voc(ICT) துறையையும் பாராட்டி ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்தனர். 


சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரியின் முதல்வர் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவன் A.அப்துல் சமீர் நன்றியுரை வழங்க  விழா இனிதே நிறைவடைந்தது.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments