// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தமிழக அரசு உதவி பேராசிரியர் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழக அரசு உதவி பேராசிரியர் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

 தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் தலைவர் குமார் தலமைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது இதில் பொதுச் செயலாளர் சிவராமன், பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் ஆட்சிக்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்


இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : புதிய ஓய்வு திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன அதனை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கடந்த மாதம் பொது கலந்தாய்வு நடைபெற்றது போல 164 கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு பொது இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்

Post a Comment

0 Comments