BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி மாவட்ட பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

திருச்சி மாவட்ட பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் நிவாரண பணிகளை திருச்சி மாவட்ட பைத்துல்மால் அறக்கட்டளை தொடங்கியுள்ளது.‌.


வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, தனது அனைத்து வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்ற மக்களுக்கு உறுதுணையாக பல்வேறுப்பட்ட பணிகளை திருச்சி மாவட்ட பைத்துல்மால் அறக்கட்டளை செய்து வருகிறது. முதல் கட்டமாக 100 குடும்பங்களுக்கு தேவையான போர்வை ,கைலி மற்றும் சேலை வழங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக 300 குடும்பங்களுக்கு தேவையான மல்லிகை பொருட்கள் மற்றும் போர்வை துண்டு, கைலி, சேலை போன்ற பொருட்களும் விநியோகம் செய்யப்பட உள்ளது. திருச்சி மாவட்ட தலைவர் டாக்டர் சாகுல் ஹமீது தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்கள் காஜா மைதீன் மற்றும் ஷபிஅகமது, மாவட்ட செயலாளர்களான உசைனி, சாகுல் ஹமீது, ஹஜ்மொய்தீன், மேலாளர் ஹைதர் அலி ஆகியோர் முன்னிலையில் தன்னுடைய பணிகளை விட்டு அந்த பகுதி மக்களை மீட்டெடுப்பதற்காக தன்னார்வலராக தொடர்ந்த பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய இளைஞர்கள் மத்தியில் இந்த பொருட்களை ஒப்படைக்கபட்டது.

தொடர்ந்து அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுக்கட்டமைப்பு செய்யும் பணியை தொடர இருப்பதாகவும் திருச்சி மாவட்ட பைத்துல்மால் அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நிருபர் ஹைதர்

Post a Comment

0 Comments