BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி தேமுதிகவினர் சகாயமாதா திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை

விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி தேமுதிகவினர் சகாயமாதா திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை

 தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் மிக முக்கிய பிரபலமாக இருப்பவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு தைராய்டு பிரச்சினை ஏற்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.


 சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை தேவைப்படும் என மருத்துவமனை வெளியிட்டு இருந்த அறிக்கையை தொடர்ந்த திரை பிரபலங்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை  நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.


தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் விஜயகாந்த். சினிமாவில் அவரது பங்கினை ஆற்றிய பிறகு தமிழக அரசியலுக்கு வந்து தேமுதிக என்னும் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இவரது கட்சிக்கு தமிழக மக்கள் மத்தியில் மிக பெரிய ஆதரவு இருந்தது


தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் ரசிகர்கள் பலர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்..
இதன் ஒரு பகுதியாக   திருச்சி மாநகர் மாவட்டம்  பாலக்கரை பகுதி சார்பாக உலக மீட்பு பசிலிக்கா- சகாயமாதா திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை ஈடுபட்டனர்..



விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி கூட்டுப் பிரார்த்தனையில் மாவட்ட கழக செயலாளர் டிவி கணேஷ் மாவட்ட கழக செயலாளர் மாவட்ட நிர்வாகிகள் பகுதி கழக வட்டகழக ஒன்றியகழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments