BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி தேமுதிகவினர் நத்தர்ஷா தர்காவில் சிறப்பு பிராத்தனை

விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி தேமுதிகவினர் நத்தர்ஷா தர்காவில் சிறப்பு பிராத்தனை

 தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் மிக முக்கிய பிரபலமாக இருப்பவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு தைராய்டு பிரச்சினை ஏற்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.


சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை தேவைப்படும் என மருத்துவமனை வெளியிட்டு இருந்த அறிக்கையை தொடர்ந்த திரை பிரபலங்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை  நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் விஜயகாந்த். சினிமாவில் அவரது பங்கினை ஆற்றிய பிறகு தமிழக அரசியலுக்கு வந்து தேமுதிக என்னும் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இவரது கட்சிக்கு தமிழக மக்கள் மத்தியில் மிக பெரிய ஆதரவு இருந்தது




தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் ரசிகர்கள் பலர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்

இதன் ஒரு பகுதியாக தேமுதிக தில்லை நகர் பகுதி சார்பாக  மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் திருச்சி நத்தர்ஷா தர்காவில் சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர் ‌


இந்த நிகழ்வில் வாஞ்சி குமாரவேல் மாற்றுத்திறனாளி பிரிவின் துணை செயலாளர் ,

தொண்டரணி சாகுல் அமீது வெங்காயமண்டி K.காளியப்பன் மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார் கலைப்புலிபாண்டியன் பகுதி செயலாளர் மணிகண்டன் சாதிக் ஏர்போர்ட் குமார் அலெக்ஸ் பாலமுருகன் அன்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments