// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** திருச்சி அமிர்தா வித்யாலயம் பள்ளியில் 14 ஆம் ஆண்டு விழா

திருச்சி அமிர்தா வித்யாலயம் பள்ளியில் 14 ஆம் ஆண்டு விழா

திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியின் 14ஆம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேசிய தொழில்நுட்ப கழகம் டீன் ராம கல்யாண்  டைரி சகா  ஹலோ FM அவர்களும், அமிர்த வித்யாலயம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு முரளிதரன் அவர்களும் கலந்து கொண்டனர். 10 மட்டும் 12 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு கடந்த கல்வி ஆண்டில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசும், விளையாட்டில் தேசிய அளவில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசும் கொடுக்கப்பட்டது.


 பின்பு பள்ளியின் முதல்வர் ஆண்டு அறிக்கை வாசிக்க அதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. வரவேற்புரை பள்ளியின் முதல்வர் அவர்களும் நன்றியுரை பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களும் கூறினார்கள்.பெற்றோர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர் JS மகேஷ் 


Post a Comment

0 Comments