// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** மத்திய அரசை கண்டித்து திமுக அரசை பாராட்டி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானம்

மத்திய அரசை கண்டித்து திமுக அரசை பாராட்டி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானம்

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் விரைவில் மாவட்டத்தின் சார்பாக புதிய ஆம்புலன்ஸ் வாங்க முடிவு செய்யப்படுகிறது. வருகின்ற ஜனவரி 24 மற்றும் 25 ஆம் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெறக்கூடிய உலக அளவிலான சிலம்பு போட்டியில் நமது யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் ஸ்போர்ட்ஸ் மாணவர்கள் கலந்துக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும் சமீபத்தில் நடந்த இரண்டு மழை வெள்ள பேரிடர் காலங்களிலிலும் ஒன்றிய பாஜக அரசு நிவாரண நிதியை வழங்காமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். 


மேலும் சிறப்பாக செயலாற்றிய தமிழ்நாடு அரசுக்கு பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கிறோம். வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பபட்டுள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments