NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மொழிப்போர் தியாகிகளுக்கு ஓபிஎஸ் அணியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

மொழிப்போர் தியாகிகளுக்கு ஓபிஎஸ் அணியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

 திருச்சி தென்னூர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது..


அருகில் துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ராஜ்மோகன் சாமிக்கண்ணு ரத்தினவேல் அவை தலைவர் வக்கீல் ராஜ்குமார் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.



 முன்னதாக திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகே இருந்து பேரணியாக நடந்து சென்று மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment

0 Comments