// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி தேசிய கல்லூரியில் பொங்கல் விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

திருச்சி தேசிய கல்லூரியில் பொங்கல் விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

திருச்சி தேசியக் கல்லூரியில் பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பல்வேறு துறைகளின் சார்பில் புதுப்பானை வைத்து புத்தரிசியிட்டு பொங்கலிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.


உழைத்துக் களைத்து ஓய்ந்து போன உழவன் தன் பயிர்த்தொழில் செழிக்க ஒத்துழைத்த கதிரவனுக்கும், காளைகளுக்கும் நன்றி பாராட்டும் பொருட்டு உறவுகளோடு ஒருங்கிணைந்து நடத்தும் பண்பாட்டு விழாவே பொங்கல் விழா என்று பொங்கல் உரை நிகழ்த்தினார். விழாவில் உரியடி, மாட்டு வண்டி, குதிரை வண்டி, சிலம்பாட்டம், சேவல் சண்டை, கயிறு இழுத்தல். மாணவ மாணவிகளின் நடனம் என்று பண்பாட்டைப் பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் வரவேற்புரை வழங்கினார்.


துணை முதல்வர் முனைவர் து.பிரசன்னபாலாஜி விழாவை ஒருங்கிணைத்து நன்றியுரை நல்கினார். இவ்விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments