BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** ரயில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி சமூக நல அமைப்புகள் மனு

ரயில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி சமூக நல அமைப்புகள் மனு

 திருச்சி கோட்டத்திற்க்கு உட்பட்ட  ரயில் நிலையங்களில் ரயில் பயிணிகளுக்கு பல்வேறு  அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..


திருச்சி ரயில்வே கோட்டம் தமிழகத்தில் உள்ள மத்திய பகுதி ஆகும் திருச்சி ரயில்வே கோட்டம் ரயில்வே  நிர்வாகதிர்க்கு அதிக வருவாய் ஈட்டி  தருகிறது திருச்சி கோட்டத்திர்க்கு உட்பட்டு பல்வேறு மாவட்டங்களில்  ரயில் சேவை  செயல்படுகிறது திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து தின தோறும் பல் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் ரயில் பயண்த்தை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில்  வைக்கபடும் கோரிக்கைகளை மத்திய ரயில்வே நிர்வாகம் திருச்சி கோட்டத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி கோட்ட ரயில் பயனீட்டாளர் கலந்தாய்வு குழு உறுப்பினர் ஆர்.கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்

1) திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இயக்கப்படும் பேட்டரி வாகன கட்டணம் தற்போது 1நபருக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது அந்த கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


2) திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் ரயில்வே நடை மேடைகளில் மொபைல் டாய்லெட் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

3) பல்வேறு விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்



4) அனைத்து விரைவு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிகள் 1 மட்டுமே உள்ள நிலையில் அதை 2 பெட்டிகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

5)  பாசஞ்சர் ரயில்களின் கட்டணங்கள் கொரோணா கால கட்டத்தில் எக்ஸ்பிரஸ் கட்டணமாக உயர்த்தப்பட்டது அதை February  மீண்டும் பாசஞ்சர் கட்டணமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்



6) திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குறைந்த விலையில் வழங்கபட்டு வந்த சுத்திகரிப்பு குடிநீரை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

7) திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள தானியங்கி நடைமேடை ஏறுவதற்கு மட்டுமே தற்போது உள்ள நிலையில் ரயில் பயணிகள் இறங்குவதற்க்கான தானியங்கி நடைமேடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்



8) திருச்சி மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய தினசரி திருச்சி பெங்களூர் விரைவு ரயில்  திருச்சி சென்னை விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

9) திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளை தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்



10) திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகில் உள்ள தேவதானம் சஞ்சீவி நகர் ரயில்வே கேட் பகுதியில் ரயில் செல்லும் நேரங்களில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் மற்றும் ரயில் செல்லும் வரை நீண்ட நேரம் ரயில்வே கேட் திறக்கும் வரை வாகனங்கள் நிற்பதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக செல்லும் நோயாளிகள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகின்றனர் எனவே ரயில்வே நிர்வாகம் இந்த ரயில்வே கேட் பகுதியில் புதிய பாலம் அல்லது சுரங்க பாதை அமைத்து தர வேண்டும்

உள்ளிட்ட திருச்சி மாவட்ட பொதுமக்கள் ரயில் பயணிகள் சமூக நல அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட  கோரிக்கை மனுவை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் திரு. எம்.எஸ். அன்பழகன்  அவர்களிடம் மற்றும் முதுநிலை கோட்ட வணிக மேலாளர் Dr. இ. செந்தில்குமார் உள்ளிட்ட  அதிகாரிகளை திருச்சி ரயில்வே கோட்ட கலந்தாய்வு குழு உறுப்பினர் திரு. கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில்  பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்  இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவரும் திருச்சி கோட்டம் ரயில்வே கலந்தாய்வு குழு உறுப்பினருமான ஆர். கோவிந்தராஜ் அறிஞர் அண்ணா சிட்டிசன் ரைட்ஸ் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் அண்ணாதுரை Bhel தொழிற்சங்க தலைவர் வே. நடராஜா தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் அமைப்பின் தலைவர் சிவசங்கர் பெட்காட் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முனைவர் கார்த்திக் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் ஒயிட் ரோஸ் பொது நல சங்கத்தின் தலைவர் சங்கர் பெட்காட் திருச்சி மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் பாத்திமா கண்ணன் தாய்நேசம் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் ஹப்ஸி சத்தியாராக்கினி சமூக ஆர்வலர் ரூபி ஆர்ம்ஸ்ட்ராங் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் திருச்சி மாவட்ட விளையாட்டு பிரிவு இணைச்செயலாளர் எழில் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அளித்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்

Post a Comment

0 Comments