// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இலக்கிய திருவிழா போட்டிகள் - 190 மாணவர்கள் பங்கேற்பு

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இலக்கிய திருவிழா போட்டிகள் - 190 மாணவர்கள் பங்கேற்பு

 திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பொது நூலகத் துறையும் மாவட்ட நூலக ஆணைக் குழுவும் இணைந்து இளைஞர் இலக்கியத் திருவிழாப் போட்டிகளை இன்று நடைபெற்றது .


கல்லூரி முதல்வர் முனைவர் விஜயலட்சுமி தலைமையில் விழாநடைபெற்ற விழாவில் கல்லூரி நூலகர் முனைவர் பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார், நோக்க உரையினை மாவட்ட முதுநிலை நூலகர்  தனலட்சுமி வழங்கினார்.இந்த இலக்கியத் திருவிழாவில், இரண்டு நிமிட / ஆறு நிமிட பேச்சுப் போட்டி, நூல் அறிமுகம், உடனடி ஹைக்கூ, ஓவியம், படத்தொகுப்பு உருவாக்கம், புத்தக மதிப்பீடு, இலக்கிய வினாடிவினா, விவாத மேடை செயற்கை நுண்ணறிவுத்திறன் போன்ற பத்துப் போட்டிகள் நடைபெற்றன. 


கல்லூரியில் பயிலும் 190 மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தனித் திறமைகளை வெளிப்படுத்தினர், பரிசுத் தொகை மொத்தம் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஆகும்

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெறும் காவிரி இலக்கிய விழாவில் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுவார்கள்.இலக்கியத் திருவிழாப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் காசிமாரியப்பன்  நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments