BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தேசிய அளவில் ஓவியம் மற்றும் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேசிய அளவில் ஓவியம் மற்றும் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

 தலைநகர் டெல்லியில்  75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய அளவில்  பள்ளி மாணவர்களுக்கான ஒவிய போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவிக்கும் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது..


 தலைநகர் டெல்லியில் 75 வது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில் மத்திய கல்வித்துறை அமைச்சகம் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வீர்கதா 3.0 சூப்பர் 100 என்கிற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது ..


இப்போட்டியில் தேசிய அளவில் 100 திறமையான மாணவ மாணவிகளை தேர்ந்தெடுப்பதற்க்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன மத்திய அரசு சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1ஒரு கோடியே 3 லட்சம் மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டிகளில்  கலந்து கொண்டனர் அவர்களில் இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 100 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர் இந்த 100 வெற்றியாளர் களில் ஒருவராக   திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செயின்ட் ஜேம்ஸ் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் கயல்விழி என்கிற மாணவி ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு ஜான்சிராணி அவர்களின் படத்தினை வரைந்து வெற்றி பெற்று தமிழகந்திற்க்கும் திருச்சி மாவட்டத்திர்க்கும் பெருமை சேர்த்துள்ளார் தேசிய அளவில் வெற்றி பெற்ற சூப்பர் 100 மாணவர்களுக்கு  தலைநகர் டெல்லியில் பாராட்டு விழா நடைபெற்றது இவ்விழாவில்  மாண்புமிகு மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்கள் பதக்கம் சான்று மற்றும் பரிசு தொகை 10000 யினை வழங்கி சிறப்பித்தார்.


அதே பள்ளியில்  8ம் வகுப்பு பயிலும் தமிழ் வேந்தன் என்கிற மாணவர் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்று வெற்றி பெற்றார் இப்போட்டியில் டெல்லி அசாம்  தமிழ்நாடு கேரளா கர்நாடக பிகார் மஹாராஷ்டிரா உத்தர்பிரதேஷ் ஒரிசா உத்தர்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300 வீரர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது   வெற்றி பெற்று திருச்சி திரும்பிய இரு மாணவர்களும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்..



அதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் ந.காமினி I.P.S அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர் மேலும் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர்  செல்வகுமார் I.P.S அவர்களையும் திருச்சி மாநகர காவல்துறை  துணை ஆணையர் அன்பு அவர்களையும் மற்றும் உதவி ஆணையர் நிக்ஸன்  அவர்களையும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்..



மேலும்  திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நுகர்வோர்  பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின்  தலைவர் கோவிந்தராஜ்   தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் அமைப்பின் தலைவர் சிவசங்கர்


பெட்காட் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் முனைவர் கார்த்திக் தாய் நேசம் அறக்கட்டளையின் தலைவர் ஹப்சி சத்தியாராக்கினி சமூக செயற்ப்பாட்டாளர்கள் கோவிந்தசாமி  ஆர்ம்ஸ்ட்ராங் ராபி ஒயிட் ரோஸ் சமூ நல அமைப்பின் தலைவர்  P. சங்கர் பெட்காட்







மகளிர் பிரிவு செயலாளர் பாத்திமா கண்ணன் தின சேவை அறக்கட்டளை நிர்வாகி பகவதி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிர்வாகி சிவபிரகாசம் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கொளரவ தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் அமைப்பின் நிறுவனர் &  தலைவர் ஆர். கே. குமார் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச்.சுப்பிரமணியன் ஆகியோரின் ஆலோசனை படியும் அமைப்பின் நிர்வாகிகள் கொளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் அண்ணாதுரை மாவட்ட தலைவர் Er. செந்தில்குமார் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஆறுமுகம் வழக்கறிஞர் கார்த்திகா மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணைச் செயலர் அல்லி கொடி விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள பயிற்ச்சியாளருமான சுரேஷ் பாபு இணை செயலர் எழில் மணி அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் ஆகியோர் பாராட்டு  மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் மேலும் இந்நிகழ்வில் மாணவர்கள் பயிலும் செயின்ட் ஜேம்ஸ்  பள்ளியின் தாளாளர் Rev Fr. S.தாமஸ் பள்ளியின் முதல்வர் திருமதி. ஜாக்குலின் இம்மாகுலேட் உடற்கல்வி துறை ஆசிரியர்கள் சுரேஷ் விவேக் சரண்யா ஆங்கில ஆசிரியர் ஜோஸ்பின் கிளின்ஸி  மாணவர்களின்  பெற்றோர்  உள்ளிட்டோர்   வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தனர்

Post a Comment

0 Comments