// NEWS UPDATE *** அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிப்பு, தாராபுரம் தொகுதில் தவெக சார்பில் சத்தியபாமா வேட்பாளராக அறிவிப்பு பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது *** திருச்சியில் புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்

திருச்சியில் புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்

திருச்சியில் புதிய பேருந்து நிழற்குடையை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் இன்று திறந்து வைத்தார்.


திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மொராய் சிட்டியில் மக்கள் பயன்படும் வகையில் புதியதொரு பேருந்து நிழற்குடையை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.




அருகில் மாநகராட்சி ஏசி சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன்,மண்டலம் _2கோட்ட தலைவர் ஜெய நிர்மலா, வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments