// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி சௌராஸ்டிரா சபா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருச்சி சௌராஸ்டிரா சபா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

 திருச்சி சௌராஸ்டிரா சபா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் - பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

திருச்சி சௌராஸ்டிரா சபா, திப்பா R. கண்ணன் அறக்கட்டளை, நாம் இணைவோம் சேவை அமைப்பு மற்றும் தனியார் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் திருச்சி பெரிய  சௌராஸ்டிரா தெரு மாதர் சங்கத்தில் இன்று நடைபெற்றது. 

சபை  தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பொருளாளர் வீரேந்திரன், செயலாளர் LIC சங்கர், நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், B.k.சரவணன், Kld.சரவணன், குமார், ஜெய் கணேஷ், வசந்தி, மேகலா தேவி, உமா மகேஸ்வரி மற்றும் அமைப்பின் சார்பில் நாகராஜன், குப்புசாமி, கோபிநாத் மற்றும் ஜெயக்குமார், சந்திரா, யுவஶ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர். 


இந்த மருத்துவ முகாமில் உயர்தர லேசர் கண்புரை அறுவை சிகிச்சை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில் சிறுவர்கள், பெரியவர்கள் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

Post a Comment

0 Comments