BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாக்க கோரி மனிதநேய வர்த்தகர் நல சங்கம் சார்பில் மனு

தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாக்க கோரி மனிதநேய வர்த்தகர் நல சங்கம் சார்பில் மனு

 திருச்சி கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கம் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மாவட்ட தலைவர் முகமது ராஜா முன்னிலையில் திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்..




இந்த மனுவில் கூறியிருப்பதாவது.... திருச்சி கடைவீதியில் தரைக்கடை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உறுப்பினர்களாக ஜந்து கிளை சங்கங்கள் உள்ளன. அவற்றில் 400க்கும் தரைக்கடை வியாபாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.



திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், கல்லூரி சாலை, தெப்பக்குளம், NSB ரோடு, பெரிய கடைவீதி, சிங்கார தோப்பு, காமராஜர் வளைவு அதனை சுற்றி துணி கடைகள், செருப்பு கடைகள்,பேன்ஸி, விளையாட்டு பொருட்கள், வைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். தற்போது தரைக்கடை வைத்து இருக்கும் வியாபாரிகள் 25 வருடங்களாக வியாபாரம் செய்து வருகின்றனர் ..



பொதுமக்களுக்கு,  போக்குவரத்தில் எந்த வித இடையூறு இல்லாமல் குறைந்த விலையில் விற்பனை செய்து வியாபாரம் செய்து வருகின்றனர்.மேலும் தமிழக அரசு தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்..


தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்யும் NSB ரோடு, பெரிய கடைவீதி, சிங்காரதோப்பு, தெப்பக்குளம், காமராஜர் வளைவு, கல்லூரி சாலை , சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை வியாபாரஸ்தலமாக மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் ..

அறிவிக்க முடியாத‌ பட்சத்தில் யானைகுளம் பகுதியில்  வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் முகமது ராஜா, வர்த்தக சங்க செயலாளர் அன்சர் அலி, வர்த்தக அணி மாவட்ட தலைவர் கபீர் அகமது , தமுமுக மமக மாவட்ட துணை  தலைவர் சையது முஸ்தபா, துணை செயலாளர் சம்சுதீன், வர்த்தக அணி துணை செயலாளர் சிபாயத்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments