NEWS UPDATE *** தென்காசி மாவட்டம் கடையத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது ************** “பாஜக – அதிமுக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி… மக்கள் தூக்கி எறியப் போவது உறுதி” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்! *** அரசு அதிகாரிகளை கண்டித்து திருச்சியில் மூடப்பட்ட தனியாா் பஞ்சாலையில் பணியாற்றிய ஊழியா்கள் ஐஎன்டியுசி, விசிகவுடன் இணைந்து ஆர்ப்பாட்டம்

அரசு அதிகாரிகளை கண்டித்து திருச்சியில் மூடப்பட்ட தனியாா் பஞ்சாலையில் பணியாற்றிய ஊழியா்கள் ஐஎன்டியுசி, விசிகவுடன் இணைந்து ஆர்ப்பாட்டம்

 திருச்சி மாவட்டம்  ராம்ஜிநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்களுடன் இயங்கிய ஸ்ரீ உமா பரமேஸ்வரி பஞ்சாலை, நஷ்டத்தால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதையடுத்து அந்த பஞ்சாலையை ஏலத்திற்கு எடுத்து நடத்திய வேறொரு நிறுவனம் ஏற்கெனவே இருந்த தொழிலாளா்களை வேலையிலிருந்து நீக்கியது. ஆனால் அந்த நிறுவனம் அவா்களுக்கான வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பயன்களை 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் இழுத்தடிக்கிறது. இதுதொடா்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தீா்வு இல்லை.





இதையடுத்து வரவேண்டிய தொகையைப் பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தி வரும் கலைத்தல் அதிகாரி மற்றும் அரசு வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை இழந்து வறுமையில் வாழும் தொழிலாளா்களைப் பாதுகாக்க ஆட்சியா் தலைமையில் உடனடியாக முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.என்.டி.யு.சி மற்றும் உமா பரமேஸ்வரி மில்ஸ் தொழிலாளர்கள் போராட்ட குழு சார்பில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  





ஐஎன்டியுசி தலைவா் ஜெம்புநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மாநகர மேற்கு மாவட்ட செயலாளர் லாரன்ஸ், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் சக்தி ஆற்றலரசு உள்பட ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Post a Comment

0 Comments