NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி அண்ணாநகர் பகுதியில் புதிய நியாய விலைக்கடை திறப்பு

திருச்சி அண்ணாநகர் பகுதியில் புதிய நியாய விலைக்கடை திறப்பு

திருச்சி அண்ணா நகர் பகுதியில் ₹.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!


திருச்சி மாநகராட்சி 5 வது மண்டலத்திற்கு உட்பட்ட தென்னூர்  அண்ணா நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 11.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பொது மக்கள் பயன்பாட்டிற்காக  இன்று திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.


 இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர்  வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், 28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments