BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தேசியக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்க மாதிரிப் பயிலரங்கம்

தேசியக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்க மாதிரிப் பயிலரங்கம்

 திருச்சி தேசியக் கல்லூரியில் பிப்ரவரி 7 முதல் 11 வரை பன்னாட்டு விளையாட்டுக் கருத்தரங்கம் (ICRS 2024) நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக  பன்னாட்டுக் கருத்தரங்க மாதிரிப் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. 


கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் அவர்கள் தலைமையேற்று பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.சென்னை ஒய் எம் சி ஏ கல்லூரியின் மூத்த பேராசிரியர் முனைவர் ஜோதி தயானந்தன் அவர்கள் முன்னிலை வகித்து மாதிரிப் பயிலரங்கத்தின் கருதுகோள்களை நோக்கவுரையாக வழங்கினார். 

இந்த மாதிரிப் பயிலரங்கத்தில் விளையாட்டுத் துறையில் பயன்படும் உடலியக்க  சிகிச்சை உத்திகள் என்ற முதல் அமர்வில்  மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த முனைவர் வேதிகா குஜராத்தி மற்றும் முனைவர் அதிதி முண்டாடா ஆகியோர் பங்கேற்ற சிறப்பு அமர்வுகள் நடைபெற்றது.

இயந்திரத்தனமான மனித வாழ்க்கையில் உடலையும் மனதையும் சமப்படுத்துவதற்கு விளையாட்டுத் துறையில் உடலியக்க சிகிச்சை முறைகளே மிகவும் பயன்படுவதாகவும் உடலியக்க சிகிச்சை முறைகளின் பல்வேறு படிநிலை உத்திகள் குறித்தும் இவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். தொடர்ந்து தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ரஜினிக் குமார் பழனியப்பன் அவர்கள் விளையாட்டுத் துறையில் உயிரியளவியல் என்ற பொறுமையில் கருத்துரை வழங்கினார். மனிதர்களின் உடலில் சார்ந்த கூறுகளை அளவீடு செய்து அறிவதற்கு உயிரியளவியல் மிகவும் பயன் தருவதாக விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து ஜோஹோ ஹெல்த் நிறுவனத்தின் மருத்துவ ஆலோசகர் முனைவர் தர்மேஷ் குபேந்திரன் விளையாட்டு சிகிச்சை என்ற பொருண்மையில் தம் கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தார். மனிதர்களின் பல்வேறு உடலில் சார்ந்த சிகிச்சைகளுக்கு மருந்துகள் தாண்டி விளையாட்டு சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதை பல்வேறு சான்றாதாரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தார். முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பன்னாட்டுக் கருத்தரங்க மாதிரி பயிலரங்கத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பள்ளி கல்லூரி மாணவர்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த உடற்கல்வியியல் ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments