NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** குளித்தலையில் கால்நடை வளர்ப்போர் தகவல் மையம் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

குளித்தலையில் கால்நடை வளர்ப்போர் தகவல் மையம் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.1கோடி மதிப்பீட்டில் புதியதாக கள ஆய்வு மற்றும் கால்நடை வளர்ப்போர் தகவல் மையம்  மற்றும் உதவி இயக்குநர் அலுவலகம் (குளித்தலை கோட்டம்) ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 


குளித்தலை சட்ட மன்ற உறுப்பினர் கள ஆய்வு மற்றும் கால்நடை தகவல் மையத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். கரூர் மாவட்ட கால்நடை இணை இயக்குனர் சாந்தி தலைமை வகித்தார்.


இந்த நிகழ்வில் குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, கால்நடை உதவி மருத்துவர்கள் ரமேஷ், பிரேம்குமார், நவீன், கார்த்திக், வரதராஜன், சுமதி, அரசு வழக்கறிஞர் சாகுல் ஹமீது, நகர்மன்ற உறுப்பினர் பொன்னர்,  அலுவலக உதவியாளர் கண்ணன், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments