BREAKING NEWS *** ஈரான் அதிபர் மரணம் - பிரதமர் இரங்கல் *** பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1,500 குடும்பங்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1,500 குடும்பங்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

 பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1,500 குடும்பங்களுக்கு இலவசமாக உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்  பாரி வேந்தர் உறுதி அளித்தார்..


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூணாம் பாளையம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..


அப்போது அவருக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.இதனை தொடர்ந்து அய்யம்பாளையம், திருவெள்ளறை, திருப்பஞ்சலி, சிறுகாம்பூர் , உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பாதிவேந்தர் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்..


கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நல்லாட்சி செய்து வரும் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் அவரது தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என வாக்கு சேகரித்தார்..மீண்டும் பாரிவேந்தர் ஆகிய நான் பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆனால் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி திட்டம் தொடரும் மேலும் 1,500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை எஸ் ஆர் எம் மருத்துவமனையில் வழங்கப்படும் என வாக்கு சேகரித்தார்..


அப்போது கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, பொது செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்யநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் எஸ் எஸ் வெங்கடேசன், திருச்சி மாவட்ட தலைவர் செல்வகுமார், மற்றும் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ,பாமக, அமமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments