BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தமிழக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக தேர்தல் அறிக்கை

பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தமிழக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக தேர்தல் அறிக்கை

 வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக மக்கள் தேர்தல் அறிக்கையை மாநில செயலாளர் முகமது காசிம் திருச்சியில் இன்று வெளியிட்டார். அருகில் மண்டல அமைப்பாளர் சையது முகமது மக்கள் தொடர்பு செயலாளர் நவாஸ்கான், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு மாநில தலைவர் கமாலுதீன் ஆகியோர் உடன் இருந்தனர். 


அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக மக்கள் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியி தேர்தல் அறிக்கை குழுவிடம் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புகள் ஆகியோரிடம்  வழங்கப்பட்டுள்ளது. 



இந்த தேர்தல் அறிக்கையில் எங்களின் கோரிக்கைகளாக நாட்டு மக்கள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகள் கிடைக்க செய்யும் மக்கள் நல அரசாக புதிய அரசு அமைய வேண்டும், சிறுபான்மையோர் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கும் வண்ணம் தேவையான சட்டங்களை இயற்றி நடப்பில் உள்ள சட்டங்களை திருத்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வேளாண்துறைக்கு புத்தூயிர்ட்டும் வண்ணம் ஒருங்கிணைந்த திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் சிறுபான்மையினருக்கு கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஊழல் ஒழிப்பு பெண்கள் மேம்பாடு கல்வி சீர்திருத்தம் சமூக முன்னேற்றம் அணிசாரா வெளியுறவு கொள்கை வட்டியில்லா வங்கி பொருளாதார சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மக்கள் எதிர்பார்ப்புகளை முன்வைத்து கோரிக்கைகள் அடங்கிய இந்த மக்கள் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது



தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக வெளியிடப்பட்ட இந்த மக்கள் தேர்தல் அறிக்கையை ஏற்கும் அரசியல் கட்சிக்கு  தங்களின் ஆதரவு .என தெரிவித்தார்.

நிருபர் ஹைதர் 

Post a Comment

0 Comments