BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** குளித்தலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா குளித்தலை நகர தி.மு.க பொதுக்கூட்டம்

குளித்தலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா குளித்தலை நகர தி.மு.க பொதுக்கூட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் குளித்தலை பேருந்து நிலையம் டாக்டர் கலைஞர் சட்டமன்ற பொன்விழா அருகே நடைபெற்றது..


இந்த கூட்டத்திற்கு குளித்தலை நகர செயலாளர் மாணிக்கம்,   எம்.எல்.ஏ  தலைமை வகித்தார். குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர்  சந்திரன் வரவேற்றார் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவும் மாநில பொறியாளர் அணி தலைவருமான துரை சரவணன் சிறப்புரையாற்றினார்.  





இந்த கூட்டத்தில் எம்எல்ஏ மாணிக்கம் பேசிய போது 1975 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் வீடு இல்லாதவர்களுக்கு முதன்முதலாக வீடு கட்டி கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள நிதிநிலை அறிக்கையில் ஒரு லட்சம் பேருக்கு  3.50 லட்சம் மதிப்பீட்டில் ரூ 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைவரும் வீடு கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளார்



மேலும் 2000 கி.மி கிராமப்புற சாலைகளுக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் உபயோகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற அதிமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி கடன் வைத்து சென்றுள்ளனர்.



மேலும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு எவ்வித நிவாரண தொகையும் வழங்காமல் ஏமாற்றி வருகிறது.குளித்தலை தொகுதி மக்கள் என்றென்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வரும் பாராளுமன்ற தேர்தலில் உதய சூரியனுக்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிப் பெற செய்ய வேண்டும் என்றார்.





கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ராமர் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை கரிகாலன் கதிரவன் பேரூர் நகர செயலாளர் ரவீந்திரமுத்து என்கின்ற சுப்பிரமணி பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நகர மன்ற தலைவர் சகுந்தலா மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன் ஒன்றிய குழு தலைவர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முடிவில் மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.


நிருபர் கரூர் குமரவேல் 

Post a Comment

0 Comments