BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா அறிமுக கூட்டம்

திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா அறிமுக கூட்டம்

 திருச்சி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவை,  முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி.விஜயபாஸ்கா் அறிமுகம் செய்துவைத்துப் பேசினாா். புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்தில் அவா் பேசியது: திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக துடிப்பான இளைஞா், புதுக்கோட்டை மண்ணின் மைந்தா் ப. கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளாா். இந்தத் தொகுதியில் இலை துளிா்க்கப் போகிறது.



அதில் எந்த மாற்றமும் இல்லை. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் தொண்டைமான், நகர அதிமுக செயலா்கள் க. பாஸ்கா், அப்துல்ரகுமான் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகளும், தேமுதிக, எஸ்டிபிஐ கட்சியின் நிா்வாகிகளும் கலந்து கொண்டனா். கூட்டத்தில் வேட்பாளா் ப. கருப்பையா கலந்து கொண்டு வாக்குசேகரித்துப் பேசினாா்.


Post a Comment

0 Comments