// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

 இலவச பொது மருத்துவ முகாம்.... மறைந்த  முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியாளர் என் செல்வராஜின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 


டாக்டர் ராஜரத்தினம் தலைமையில் மருத்துவ குழுவினர் கல்லீரல், சிறுநீரகம், இருதயநோய் ,நரம்பு மற்றும் எலும்பு நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.மேலும் இந்த முகாமையொட்டி எண்டோஸ்கோப்பி சிகிச்சை ECG, VSG ஸ்கேன் ஆகியவை முற்றிலும் இலவசமாகவும் சிடி ஸ்கேன் 50 சதவீத கட்டண சலுகை கட்டணத்தில் செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments