NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!

மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!

 நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளில் முனைப்பு காட்டி வருகிறது.


அந்த வகையில் வரும் மக்களவை தேர்தலில் திமுகவுடன் இனைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்து அறிவிக்கபட்டிருந்தது. மேலும், மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்து மக்களவை தேர்தலில் 1 தொகுதியும், மாநிலங்களவையில் ஒரு இடமும் கேட்டிருந்து. கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்திருந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தார்.


பின்னர், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை (ராஜ்ய சபா) ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, இதற்கான ஆவணம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.





பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம். "மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 40 தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம் எனவும் தி.மு.க. கூட்டணியில் மாநிலங்களவை (ராஜ்ய சபா) ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னதாக, அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.

Post a Comment

0 Comments