NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு அதிமுக மாணவரணி சார்பில் பிரம்மாண்ட மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு அதிமுக மாணவரணி சார்பில் பிரம்மாண்ட மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா திருச்சி மாநகரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேல சிந்தாமணி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில், மேல சிந்தாமணி பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


முன்னதாக, கிரேன் மற்றும் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள் வெற்றி கோஷங்களை எழுப்பி, அதிமுக வெற்றி வேட்பாளருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.




இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, மனோகரன், பகுதி கழக செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Post a Comment

0 Comments