திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100% சதவீதம் வாக்கு பதிவை பெறும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் நகர் பகுதிகளான டி.வி.எஸ்.டோல்கேட் மன்னார்புரம்,கே.கே.நகர்,சத்திரம் பேருந்து நிலையம், அம்மா மண்டபம் பொன் நகர் திருவெறும்பூர் காட்டூர் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான சோமரசன்பேட்டை அதவத்தூர், போசம்பட்டி, சமயபுரம், வாளாடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது திருச்சி மாவட்டத்தில் 100% சதவீதம் வாக்குபதிவு பெறவும் பொதுமக்கள் இளைஞர்கள் இளம் பெண்கள் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் விலைமதிப்பற்ற நமது வாக்கை விற்பனை செய்யாமல் மனசாட்சிபடி நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் வாக்கை பயன்படுத்தி சரியான நபரை தேர்தெடுக்க வேண்டும் என்றும் துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..
மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான திரு. எஸ்.மார்ட்டின் அவர்கள் தலைமை தாங்கி பேருந்து பயணிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
0 Comments