திருச்சியில் சில நாட்களுக்கு முன் அமமுக வை சேர்ந்த தொட்டியம் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது அமைச்சர் நேரு அவர்கள் அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த ரெட்டியார் இனத்தவர்களுக்கு தான் பதவிகளை கொடுத்து வருகிறார் மற்ற சமூகத்தினருக்கு துரோகம் செய்து வருகிறார் என்று செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இது குறித்து திருச்சி பனையபுரம் ஊராட்சி தலைவர் முத்துக்குமரன் கடும் கண்டனத்தை ராஜசேகருக்கு தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது நான் திமுக ஊராட்சி செயலாளராகவும் ஊராட்சி மன்ற தலைவராகவும் 15 வருடங்களுக்கு மேலாக அமைச்சருடன் பயணித்துள்ளேன் திமுக ஆட்சி இல்லாத போதும் திமுக ஆட்சி இருக்கும் பொழுதும் அவருடன் இருந்து வருகிறேன். சமீபகாலமாக மாண்புமிகு அமைச்சர் நேரு அவர்கள் முத்தரையர் இனத்துக்கு துரோகம் செய்தது போல சிலர் அவர் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர் இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி எந்த ஒரு சூழ்நிலையிலும் முத்தரையர் இனத்திற்கு மட்டுமல்ல எல்லா இனத்தவருக்கும் இந்து முஸ்லிம் கிறிஸ்துவ அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் அமைச்சர் அவர்கள் முத்தரையர் ஜாதியினருக்கும் மற்ற ஜாதியினருக்கும் பதவி வழங்காதது போல ஒரு சூழ்நிலையை உருவாக்கி அவருடைய புகழுக்கு கலங்கம் விளைவிக்கின்றனர் இது முழுக்க முழுக்க பொய்யான செய்தி ஆகும் முத்தரையர் இனத்தவருக்கு மட்டுமல்ல மற்ற ஜாதியினருக்கும் அமைச்சர் அவர்கள் நிறைய பேருக்கு பதவிகள் வழங்கி இருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்லப் போனால் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் முத்தரையினத்தை சேர்ந்தவர் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர் மாவட்ட அவை தலைவர் பேரூர் தர்மலிங்கம் முத்தரையினத்தை சேர்ந்தவர் அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் லால்குடி ஒன்றிய செயலாளர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் முத்தரையினத்தை சேர்ந்தவர்.
அமைச்சர் பெயரை கெடுக்க சிலர் முத்தரையர் இனத்திற்கும் மற்ற ஜாதியினருக்கும் துரோகம் செய்வது போல அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கின்றனர் அமைச்சரால் இன்று பலர் பொறுப்புகளுக்கு வந்ததற்கு காரணம் அவருடைய முழுமையான உழைப்பு அதனால் அவருக்கு திமுக கட்சியில் கிடைத்தது மதிப்பு அமைச்சர் அவர்கள் அன்றும் திமுக இன்றும் திமுக என்றும் திமுக என்னாலும் எந்த கட்சிக்கும் செல்லாது இரவு பகலாக கட்சிக்காகவும் கழக உடன்பிறப்புகளுக்காகவும் அயராது உழைப்பவர் இந்த உழைப்பினால் தான் எவராலும் அசைக்க முடியாத நம்பிக்கை பட்டவராக கட்சி தலைமையிடம் முதன்மைச் செயலாளராக இருக்கிறார் அமைச்சரை குறை சொன்ன முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் போல பல கட்சிகளுக்கு தாவித்தாவி சென்றவர் எங்கள் அமைச்சர் அல்ல இனியும் எங்கள் அமைச்சரை பற்றி அவதூறு பரப்பினால் திமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
0 Comments