திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் ‘ஜென்’ பிரீமியம் வீட்டு மனை – வில்லாக்கள் திட்டம்: துவங்கிய 72 மணி நேரத்தில் 200 இடங்கள் விற்று சாதனை.இந்த வெற்றியை கொண்டாட ‘ஜென்’ டவுன்ஷிப்பில் "ஜி ஸ்கொயர் உற்சவம்" இசை நிகழ்ச்சி: பாடகி நித்யஸ்ரீ உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், திருச்சி ஸ்ரீரங்கத்தில் சமீபத்தில் பிரீமியம் வீட்டு மனை மற்றும் வில்லாக்கள் திட்டமான ஜி ஸ்கொயர் ‘ஜென்’ திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் துவக்கப்பட்ட 72 மணி நேரத்தில் இங்கு 200 இடங்கள் விற்பனையாகி அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது என்று இந்நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் மற்றும் காவேரி ஆற்றுக்கு இடையில் அமைந்துள்ள ஜி ஸ்கொயர் ஜென், அமைதியான சூழலை இங்கு இடம் வாங்குபவர்களுக்கு வழங்குகிறது.இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் புகழ்பெற்ற ரங்கநாதசுவாமி கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் கோயில், வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை கோயில், திருவானைக்கோயில் மற்றும் அருகிலுள்ள அழகிய முக்கொம்பு மற்றும் கல்லணை அணைகள் ஆகியவற்றுடன், ஒவ்வொரு பாரம்பரிய இடங்களுக்கும் எளிதில் சென்றடையக்கூடியம் வகையில் அமைந்துள்ளது.
மேலும் அவர் கூறுகையில், திருச்சியில் பாதுகாப்பான, நன்கு திட்டமிடப்பட்ட வீட்டு மனைகளுக்கான தேவை என்பது அதிகரித்து வருகிறது, மேலும் ஜி ஸ்கொயர் ஜென் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்பும் ஆர்வமுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதன் அமைந்துள்ள இடம், நவீன வசதிகள் மற்றும் சிறந்த விலை ஆகியவற்றுடன், அமைதிக்கான சொர்க்கமாகவும் அது உள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ச்சியான வெற்றி மற்றும் விரிவாக்கத்துடன், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ளது, வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும் அதே வேளையில், இந்த துறையில் புதியதொரு உச்சத்தை அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments