// NEWS UPDATE *** கும்மிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை *** பூங்கா இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர விஷ்வ இந்து பரிஷத் சார்பில் மனு

பூங்கா இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர விஷ்வ இந்து பரிஷத் சார்பில் மனு

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை திருச்சி மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சார்பாக சந்தித்து திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 40 வது வார்டு பகுதி வடக்கு இந்திரா நகரில் பூங்காவுக்கென ஒதுக்கபட்ட இடத்தில் மசூதி‌ கட்ட முற்பட்டனர்.அதை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி வருவாய் துறை மூலமாகவும் அரியமங்கலம் கோட்டம் மூலமாகவும் காவல் துறை  மூலமாகவும் இவர்கள் முன்னிலையில் சர்வே செய்து சர்வேயில் பூங்கா இடம் தான் என்று முடிவானது.

 அதன் பிறகு விஷ்வ இந்து பரிஷத் திருவெறும்பூர் ஒன்றிய பிரகண்ட செயலாளர் பிரபாகரன் தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்டறிந்தார்.இதில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் இது பூங்கா இடம் தான் என்று பிரபாகரன் அவர்களுக்கு கடிதம் கொடுத்தனர் பின்பு கடந்த 22.06.25 அன்று மதியம் சுமார் 50 பேர் கொண்ட இஸ்லாமியர்கள் அந்த பூங்கா இடத்தில் சுத்தம் செய்து தொழுகைக்கு முற்பட்டனர்.

அதை திருவெறும்பூர் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர் இதை கேள்வி பட்ட விஷ்வ இந்து பரிஷத்தினர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட இணை செயலாளர்  யுவராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சரவணன் சந்தித்து அந்த பூங்கா இடத்தில் பூங்காவோடு உடற்பயிற்சி நிலையம், ரேஷன் கடை, நூலகம் என்று அன்றாடம் மக்கள் பயன்பாட்டிற்கு அந்த பூங்கா இடத்தில் வைக்கு மாறு திருச்சி மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சார்பாக மனு அளித்தனர் .

இந்த நிகழ்வுக்கு திருவெறும்பூர் ஒன்றிய விஷ்வ இந்து பரிவுத் பிரகண்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் எம்பயர் கணேசன் மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் வேங்கூர் கார்த்தி, வாழவந்தான் கோட்டை கிளை தலைவர் இளையராஜா ஆகியோர்களும் மனு அளித்த போது உடன் இருந்தனர்.மற்றும் புதிதாக பொறுப்பேற்று கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் சரவணன் அவர்களுக்கு மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments