// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

திருச்சியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் திருச்சி மாவட்டம் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்றது.

திருச்சி  மாவட்ட தலைவர் பசூல் ரகுமான் முன்னிலையில், மாநில பொருளாளர் மன்சூர் தலைமையில் ,மாநில துணைத்தலைவர் அல்தாபி அவர்கள் சிறப்பு தொழுகையை நடத்தினார். 

கடந்த சில வாரங்களாக திருச்சியில் கடுமையான வெப்பத்தின்  தாக்கத்தினால், வறட்சியில் மக்கள் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கக் கூடிய சூழலில்,கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாகவும் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வதற்காகவும் , இறைவனிடத்தில் மழையை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது..




இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் பங்கேற்றனர்.

நிருபர் முஜிப்

Post a Comment

0 Comments