BREAKING NEWS *** "அளவற்ற வறுமையைத் தாண்டினார் எம்.ஜி.ஆர்" "கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்" "தமிழக அரசியலின் அதிசயம் ஆனார் எம்.ஜி.ஆர்" "இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்" -த.வெ.க தலைவர் விஜய் *** ஹஜ்ரத் சாதுஷா மாதுஷா தர்காவின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா

ஹஜ்ரத் சாதுஷா மாதுஷா தர்காவின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா

 ஹஜ்ரத் சாதுஷா மாதுஷா தர்காவின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஹஜ்ரத் சாதுஷா தர்வேஷ் ஷாஹின்ஷா காதிரி ஹஜ்ரத் மாதுஷா தர்வேஷ் அவுலியா அவர்களின் 1025 வது ஆண்டு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. 





முன்னதாக திருச்சி மேல சிந்தாமணியில் இருந்து புறப்பட்டு கடைவீதியை சுற்றி வந்து தர்காவில் நிறைவடைந்தது. மேலும் ஹஜ்ரத் சாதுஷா மாதுஷா தர்காவின் நிர்வாகிகள் பஷீர் மற்றும் இஸ்மாயில் சந்தன கூடு ஏந்தி தர்காவை மூன்று முறை சுற்றி வந்து   ஹஜ்ரத் சாதுஷா  அவுலியா மற்றும்  ஹஜ்ரத் மாதுஷா அவுலியா அவர்களுக்கு சந்தனம் பூசுதல் வைபவம் நடைபெற்றது.


இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன் மற்றும் அதிமுக மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் ஆகியோருக்கு பொன்னாடை போற்றி வரவேற்றனர். மேலும் இந்த சந்தனக்கூடு விழாவில் அனைத்து மதத்தை சேர்ந்த பொதுமக்கள் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்


 அதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு உணவு விருந்து பரிமாறப்பட்டது.

Post a Comment

0 Comments