BREAKING NEWS *** ”வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதி மேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”- அமைச்சர் சேகர்பாபு *** அரியலூர் - தனியார் சிமெண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் கரும்புகை மூட்டமாக காணப்பட்ட வானம்

அரியலூர் - தனியார் சிமெண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் கரும்புகை மூட்டமாக காணப்பட்ட வானம்

அரியலூர் மாவட்டம் ஓட்டக் கோவில் கிராமத்தில் அமைந்துள்ளது டால்மியா சிமெண்ட் ஆலை. இந்த சிமெண்ட் ஆலையில் தமிழகத்தில் இருந்து பல மாவட்டத்திலிருந்து நகராட்சி மற்றும்‌ மாநகராட்சியிருந்து  பிளாஸ்டிக் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு இங்கு சிமிட்டாலையில் உள்ள இயந்திரத்தில்  எரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


 இந்த நிலையில் அதுபோன்ற  குப்பைகளை தேக்கம் வைத்திருந்த சூழ்நிலையில் அந்த குப்பைகளில்  திடீர் தீ விபத்து ஏற்பட்டது .இதனால் ஆலையை  சுற்றி பல கிலோமீட்டர் தொலைவிற்கு கரும்புகை மூட்டமாக காணப்பட்டது.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



புகையை அனைப்பதற்கு தனியார் சிமெண்ட் ஆலையில்  உள்ள தீயணைப்பு துறை மற்றும் அரியலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து அந்த தீயை அணைக்க முயற்ச்சித்து  வருகின்றனர்.

Post a Comment

0 Comments