NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கேரளா வயநாட்டில் நாளை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

கேரளா வயநாட்டில் நாளை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

கேரளா மாநிலம் வயநாட்டில் நாளை யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக மாநில தலைவர் பீமநகர் ரபீக் அறிக்கை வெளியிட்டுள்ளார்..


அதில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை 25 ஆம் தேதி சனிக்கிழமை கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற இருப்பதால் இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதால் அனைத்து உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் , உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழ் கொண்டு வர வேண்டும் என யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கேட்டு கொண்டுள்ளார்

Post a Comment

0 Comments