சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி மலேசியாவில் கடந்த 3 நாட்கள் நடநந்தது. இதில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில் திருச்சியை சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவி லீனா கலந்து கொண்டு பெண்களுக்கான சப் ஜீனியர் பிரிவில் தனித்திறமை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.மேலும் அவர் அலங்கார சுற்று போட்டியில் வெண்கலப்பதக்கத்தயும் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவி லீனாவை சிலம்பம் உலக சம்மேளனத்தின் செயலாளர் கராத்தே சங்கர் மற்றும் சக வீரர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்
0 Comments