BREAKING NEWS *** ”வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதி மேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”- அமைச்சர் சேகர்பாபு *** கார்த்திக் வைத்தியசாலாவில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி‌ நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்

கார்த்திக் வைத்தியசாலாவில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி‌ நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்

கார்த்திக் வைத்தியசாலாவில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி‌ ரூ. 4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு  திருச்சி தில்லைநகர் கார்த்திக் வைத்திய சாலாவில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.


நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.



இதில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து ஏழை எளிய பெண்களுக்கு சேலை, உணவு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாணிக்கம் எம்எல்ஏ,  மாநகர செயலாளர் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், தில்லை நகர் கண்ணன், பகுதி செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்



நிகழ்ச்சியில் தி.மு.க.நிர்வாகிகள் மருதுபாண்டி, வாமடம் சுரேஷ், காளிமுத்து,தஸ்தகீர், அன்பு, கே. ஆர்.கே. ராஜா, கருணா மூர்த்தி, எஸ் பாண்டியன், சுந்தர், ஏ.எம். உசேன், பீமநகர் சதீஷ், விஜய், மகாலட்சுமி,டாக்டர்கள் மகேஷ், அஸ்மா, மது குமார், கணேசன், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன், திருச்சி மாநகராட்சி முன்னாள் பொது சுகாதாரக் குழு தலைவர் டாக்டர் எஸ். தமிழரசி சுப்பையா, மாற்றுமுறை மருத்துவ அகாடமி செயலாளர் டாக்டர் எஸ். விஜய் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர் 

Post a Comment

0 Comments