BREAKING NEWS *** சர்ச்சை பேச்சு - ஜாமீன் கோரி மகாவிஷ்ணு மனுத்தாக்கல் *** மிட் டவுன் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

மிட் டவுன் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

உதவும் மனம் படைத்தோர் உன்னத நிலைக்கு உயர்வார்கள் - மிட்டவுன்  ரோட்டரி கிளப்பு திய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் M.முருகானந்தம் பேச்சு


ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மிட்டவுன் 45 வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சி சங்கம் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.


சங்கத்தின் புதிய தலைவராக கா.ராமதாஸ், செயலாளராக ஆர்.சீனிவாசன்  பதவியேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி இன்டர்நேஷனல் டைரக்டர் எம். முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 


அதில், உலக அளவில் ரோட்டரி சங்கம் ஆற்றி வரும் நற்பணிகள் எதிர்கால இலக்குகளை எடுத்துக் கூறி உதவும் மனம் படைத்தோர் உன்னத நிலைக்கு உயர்வார்கள் என்றார்.

தொடர்ந்து சங்கத்தின் புதிய தலைவர் கா.ராமதாஸ் புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார்.


விழா ஏற்பாடுகளை முன்னாள் தலைவர் கௌரிசங்கர், முன்னாள் செயலாளர் முத்துக்குமரவேல், பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகி நாகராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments