BREAKING NEWS *** திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணையை தற்காலிகமாக நிறுத்திய ஆந்திர சிறப்பு விசாரணைக் குழு *** 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ரயில்வே நிலையம் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளத இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும், திருச்சியிலும் வழக்கறிஞர்கள் கடந்த 1ம் தேதி முதல் உண்ணாவிர போராட்டம், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து இன்று காலை திருச்சி ரயில்வே நிலையம் முன்பு சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முற்றுகையிட்டு பாடத்தில் ஈடுபட்டனர். 


அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாருக்கும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.



Post a Comment

0 Comments