// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதிய தின விழா நடைபெற்றது

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதிய தின விழா நடைபெற்றது

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் சென்னை சுந்தரம் ஹோம் பைனான்ஸ் முதன்மை மனித வள அதிகாரி கணபதி சுப்பிரமணியன் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்.


அதில், மாணவர்களுக்கு தொழிற்சாலையின் மனிதவள கோட்பாடுகளையும்,  இன்றைய இளம் தலைமுறையினருக்கு வேலை பெற தேவையான திறன்கள் பற்றியும், திறன்களை வளர்க்கும் வழிகள் குறித்தும், 


பல்வேறு நிகழ்கால எடுத்துக்காட்டுகள் மூலம் எடுத்துக்கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். 


முன்னதாக கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுகுமார் வரவேற்புரையாற்றினார். 


தொடர்ந்து கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மைச் செயல் அதிகாரி பிரதிவ்சந்த் வாழ்த்துறை வழங்கினார். மேலும்  இவ்விழாவில் துறைதலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக நண்பர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் ராபர்ட் நன்றியுரை வழங்கினார்.

Post a Comment

0 Comments