BREAKING NEWS *** சர்ச்சை பேச்சு - ஜாமீன் கோரி மகாவிஷ்ணு மனுத்தாக்கல் *** பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் கண்டண ஆர்பாட்டம்

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் கண்டண ஆர்பாட்டம்

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் கண்டண ஆர்பாட்டம் - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துவோம் என்ற தேர்தல் அறிவிப்புடன், தமிழகத்தில் ஆட்சியமைத்த விளம்பர திமுக அரசு கடந்த ஆண்டு மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தால் 14பேர் உயிரிழந்தநிலையில் அதற்கான சட்டமியற்றாதநிலையில், தற்போது கள்ளக்குறிச்சியில் 63பேர் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.


ஆனால் தற்போது திமுக அரசு சட்டசபையில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த சாத்தியமில்லை என்று கூறி, மதுவிலக்கு திருத்த சட்டத்தினை அமல்படுத்தியுள்ளது. 


தொடர்ந்து கள்ளச்சாராய உயிரிழப்புகளிலிருந்து பாடம்கற்காமல் தமிழகத்தை போதையின் பாதைக்கு கொண்டு செல்லும் திமுக அரசுக்கு எதிராக தொடர்போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும்நிலையில் இன்றைய தினம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றுவருகிறது.




திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும், கள்ளச்சாராய ஒழிப்பில் கடமை தவறிய அதிகாரிகளை தண்டிக்கவும், கஞ்சாயவியாபாரிகள் மீது இரும்புக்கரம்கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் பைஸ் அஹமது தலைமையில், நடைபெற்றது. 






இந்த ஆர்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைநிலைய செயலாளர் ஜெய்னுலாபிதீன் மற்றும் பலரும் பங்கேற்று கண்டண உரைநிகழ்த்தியதுடன், பூரணமதுவிலக்குகோரி கண்டண முழக்கமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மக்கள் கலை இலக்கிய கழக பொது செயலாளர் கோவன் குழுவினர் போதைக்கு எதிராக பாடல்களை பாடினர்

இந்த ஆர்பாட்டத்தில் வர்த்தகர்கள், மனிதநேய மக்கள் கட்சியினர் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments