// NEWS UPDATE *** தொழிலதிபர் வீரமணியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. பாதுகாப்பு காரணங்களுக்காக புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் வீரமணி ஆஜர் *** திருச்சி மாநகர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றப்படாத பிரச்சினை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் திருச்சி எம்பி துரை வைகோ முயற்சியால் நிறைவேற்றம்

திருச்சி மாநகர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றப்படாத பிரச்சினை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் திருச்சி எம்பி துரை வைகோ முயற்சியால் நிறைவேற்றம்

திருச்சி மாநகர் பகுதி பழைய மதுரை ரோடு பகுதியில் உள்ள நத்தர்ஷா தர்கா பின்புறம் உள்ள பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் சாக்கடை பல ஆண்டுகளாக தூர்வாராமல்  சுத்தம் செய்யாமல் இருந்ததால் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது

பலமுறை அப்பகுதி 21 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் அவர்களிடம் பொதுமக்கள் சார்பில் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்


மேலும் தற்பொழுது ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில்  தர்கா பகுதி நிர்வாகி 21 வது வட்டச் செயலாளர் அசாருதீனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் 


அதன் அடிப்படையில் தவெக கிழக்கு தொகுதி பொறுப்பாளர் தர்கா சௌகத் அறிவுறுத்தலின் படி திருச்சி எம்பி துரை வைகோவிடம்  கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த கோரிக்கையின் அடிப்படையில் தூர்வாருவதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்



மேலும் இதன் அடிப்படையில் கிழக்கு தொகுதி பொறுப்பாளர் தர்கா சௌகத்  முயற்சியில் இன்று தூர்வாரப்பட்டது


தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை திருச்சி எம்பி துரை வைகோ அறிவுறுத்தலின் படி அவரின் உதவியாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.மேலும் பல ஆண்டுகளாக எந்த முயற்சியும் 21 வது வார்டு மாமன்ற எடுக்கவில்லை.


எனவும் தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் இந்த நடவடிக்கை மேற்கொண்டு தூர்வாரி உள்ளதாகவும் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர்.இதில் தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் வட்டம் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் அப்பகுதி நத்தர்ஷா தர்கா ஸதர் கலிஃபா சையது சாதாத் ஆகியோர்  தூர்வாரும் பணியின்போது உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments