// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு பாபுரோடு பகுதியில் புதிய சாலை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்

திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு பாபுரோடு பகுதியில் புதிய சாலை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்

 திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு பாபுரோடு பகுதியில் புதிய சாலை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நீண்ட காலமாக திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு பாபு ரோட்டில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு குழி  சீரமைக்காமல் குண்டும் குழியுமான சாலை இருந்து வருகிறது.


திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம்ண மற்றும் 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் அவர்களை கண்டித்தும் 

14 வது  வார்டு  பொதுமக்கள் சார்பாக சாலை மறியல் போராட்டம்  EB ரோடு முருகன் தியேட்டர் எதிரில் சாலை மறியல் போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி 14 வார்டு  தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 



இதில் மாவட்ட தலைவர் முஹமது ராஜா மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன், மாவட்டத் துணைத் தலைவர் மு .சையது முஸ்தபா அவர்கள் முன்னிலை வகித்தார்







இதில் பகுதி மக்கள் ஜமாத்தார்கள் மற்றும்  இஸ்லாமிய கூட்டமைப்பு காங்கிரஸ் கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். பூக்கொல்லை கிளை சாகுல் , ரகுமான் அப்பாஸ் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments