உ வே சா பேரவை தொடக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக உ வே சா பேரவைத் தொடக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் தலைமையேற்றுத் தலைமையுரை நல்கினார். தமிழ் துறை தலைவர் முனைவர் காந்தி அவர்கள் முன்னிலை உரை நல்கினார். பணி நிறைவு பெற்ற மூத்த பேராசிரியர் முனைவர் இரா சபாபதி அவர்கள் உவேசா பேரவையை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.
எந்தவிதமான தொடர்பு சாதனங்களும் இல்லாத காலகட்டத்தில் உவேசா அவர்கள் தமிழ் வளர்வதற்காக மிகப்பெரிய அளவில் தொண்டாற்றிய பாங்கினை இளம் தலைமுறையினர் உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையினையும் வெற்றி பெறவேண்டிய தன்மைகளையும் விரிவாக எடுத்துரைத்தார் .
தேசியக் கல்லூரியின் மேனாள் கலைப்புல முதன்மைர்கள் முனைவர் சா .ஈஸ்வரன் மற்றும் முனைவர் ந. மாணிக்கம் மற்றும் தற்போதைய களைப்புல முதன்மையர் முனைவர் நீலகண்டன் ஆகியோர் நூல் மதிப்பு துறை வழங்கினர். முனைவர் இரா ரவிச்சந்திரன் அவர்கள் பல்வேறு பணிகளுக்கு இடையில் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுகளையும் பண்பாட்டுப் பதிவுகளையும் விரிவாக தன் நூல்களில் படைத்துள்ள மையையும் எதிர்கால தலைமுறையினர் மனிதநேய மாண்புகளையும் அறிவாற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகளையும் தம்முடைய நூல்களில் பதிவு செய்து எதிர்வரும் தலைமுறையினருக்கு முன்னோடியாக திகழ்ந்திருப்பதை நூல் மதிப்பீட்டுறையில் மதிப்பீட்டாளர்கள் கருத்துரை வழங்கினர்.
முன்னதாக உவேசா பேரவையின் துணைத்தலைவர் திருமிகு ராமதாஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிறைவாக தமிழ்த் துறையின் துணைத் தலைவர் மற்றும் நூலாசிரியர் முனைவர் இரா .ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்புரை ஆற்றி நிறைவாக நன்றியுரை நல்கினார். தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் மற்றும் பிற துறை பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிருபர் ரூபன்
0 Comments