தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கழக அமைப்புச் செயலாளர் தங்கமணி வழிகாட்டுதலின்படி அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்டம் பாலக்கரை பகுதி சார்பில் இன்று மரக்கடை அருகில் உள்ள ஏ.எம்.கே.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பாலக்கரை பகுதி செயலாளர் ரோஜர் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது..
இந்த விழாவில் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மாவட்ட அணி நிர்வாகிகள் மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக் இலக்கிய அணி பாலாஜி, ஐ.டி. விங். வெங்கட்பிரபு, 24 வது வார்டு வட்ட செயலாளர் பி.கே.கண்ணன், பிருத்விராஜ், சேது
பாசறை இலியாஸ், பேரவை இணைச் செயலாளர்கள் என்ஜினீயர் ரமேஷ், கருமண்டம் சுரேந்தர், பகுதி செயலாளர்கள் ராஜேந்திரன், கலைவாணன், என்.எஸ்.பூபதி, நாகநாதர் பாண்டி, வழக்கறிஞர் அணி வரகனேரி சசிக்குமார், முத்துமாரி, கெளசல்யா, நிர்வாகிகள் டி.ஆர்.சுரேஷ்குமார், வாழைக்காய் மண்டி சுரேஷ்குமார், நத்தர்ஷா,
மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிமுக பாலக்கரை பகுதி செயலாளர் ரோஜர் ஏற்பாட்டில் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். |
0 Comments