பாஜக பிரமுகர் வேலூர் இப்ராஹிம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதிக்கு வருகை தருவதை தடுத்து நிறுத்திட வேண்டும் மாநகர காவல் ஆணையருக்கு IUML மாவட்ட தலைவர் KMK.ஹபீபுர் ரஹ்மான் வேண்டுகோள்....!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்ட தலைவர் KMK.ஹபீபுர் ரஹ்மான் மாநகர காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில்:
பாஜகவைச் சார்ந்த வேலூர் இப்ராஹிம் என்பவர் இன்று மாலை திருச்சியில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதாக செய்திகள் வந்துள்ளது. மேலும் திருச்சியின் பழமையான இஸ்லாமிய அடையாளமான ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தர்ஷா தர்காவின் பகுதிக்கு வருகை தந்து அங்குள்ள இஸ்லாமிய மக்களிடையே ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு சட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வருகின்றது.
சமூக நல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் இலக்கணமாய்த் திகளும் திருச்சி மாநகரத்தில் இது போன்ற பிரச்சாரங்கள் நடைபெறுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
மேலும் வேலூர் இப்ராஹிம் நத்தர்ஷா பகுதிக்கு வருகை தந்தால் அங்குள்ள மக்களால் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதாலும்,சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் வேலூர் இப்ராஹிம் சூழ்ச்சிகளை முறியடித்து உடனடியாக நத்தர்ஷா தர்கா பகுதிக்கு வருவதை தடுத்து நிறுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என மனு தெரிவித்துள்ளார்
0 Comments